follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்வில் ஸ்மித்திடம் விளக்கம் கோரியுள்ள ஆஸ்கர் நிர்வாகம்

வில் ஸ்மித்திடம் விளக்கம் கோரியுள்ள ஆஸ்கர் நிர்வாகம்

Published on

ஆஸ்கர் விழாவில் சக நடிகரை அறைந்ததால் சர்ச்சையில் சிக்கிய வில் ஸ்மித் குறித்து அகாடமி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும் நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.

பின்னர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற வில் ஸ்மித் தனது செயலுக்கு கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஆஸ்கர் அகாடமி நிர்வாகத்திற்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த பின் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற மறுத்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் நிலைமையை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறோம். அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதற்காக வில் ஸ்மித் மீது இன்று ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வில் ஸ்மித்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த...

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா...

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...