follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுமே 9 வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1220 சந்தேக நபர்கள் கைது

மே 9 வன்முறைகள் தொடர்பில் இதுவரை 1220 சந்தேக நபர்கள் கைது

Published on

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்று 22 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய இதுவரையில் மொத்தமாக 827 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதற்கமைய நேற்று மாத்திரம் 161 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் நீதிமன்றத்தில் 80 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 90 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் மொத்தமாக 1220 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 540 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 570 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...