follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉலகம்பங்களாதேஷ் இலங்கையாக மாறாது - ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் இலங்கையாக மாறாது – ஷேக் ஹசீனா

Published on

பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என்று அந்த நாட்டின் பிரதமர் இன்று தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக இருக்காது, இருக்க முடியாது என்ற ஒரு விடயத்தை அனைவரும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

எனினும் தமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளதாக பிரதமர் கூறினார்.

தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47வது தியாக நினைவு தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...