follow the truth

follow the truth

May, 26, 2025
Homeஉலகம்பாம்பா பாக்யா காலமானார்!

பாம்பா பாக்யா காலமானார்!

Published on

பிரபல பாடகர் பாம்பா பாக்யா காலமானார்.

49 வயதான அவர், திடீர் சுயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இராவணன் திரைப்படத்தில், பாம்பா பாக்யா தமிழில் பாடகராக அறிமுகமானார்.

இதனை, தொடர்ந்து, ரஹ்மானின் இசையில், 2.O திரைப்படத்தில் புள்ளினங்காள், சர்கார் படத்தில் சிம்ட்டாங்காரன், பிகில் படத்தில் காலமே காலமே, பொன்னியின் செல்வன்-1 படத்தில் பொன்னி நதி போன்ற பல  பாடல்களை பாடி குறுகிய காலத்தில் பிரபலமானார்.

அண்மையில் வெளியான, பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பொன்நதி…” பாடலை ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து அவர் பாடியிருந்தார்.

இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதேவேளை, அண்மையில் சூரியன் எவ்.எம் வானொலியின் 24 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி பம்பா பாக்யா கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...