கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் மேலும் 6 பேர் கைதாகினர்.
பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனியின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மீரிகம – ஹல்பே பகுதியில் வைத்து குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.