follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉள்நாடுகொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்!

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்!

Published on

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 23 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.

No description available.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று காலை கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர உள்ளிட்டோர் வரவேற்றனர்.

No description available.

இலங்கை மன்றக் கல்லூயின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி, புத்தக வெளியீட்டாளர்கள் சங்க உறுப்பினர்களான விஜித யாப்பா, எச்.டி. பிரேமசிறி, ஆரியதாச வீரமன், அதுல ஜெயக்கொடி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த வருட புத்தகக் கண்காட்சியில் 400 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் விற்பனைக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி அவர்கள் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டதுடன் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனும் சிறிது நேரம் உரையாடினார்.

No description available.

கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்திருந்த பொது மக்களுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

No description available.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி...

சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இது...