இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி கடைசியாக 2003-ல் விளையாடியபோது ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுக வீரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.