follow the truth

follow the truth

June, 16, 2025
Homeவிளையாட்டுபுதிய சாதனை படைத்த ஜோ ரூட்

புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

Published on

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ஓட்டங்களை நிறைவு செய்த 5வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டின் முதல் நாளில் 28-வது ஓட்டங்களை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.

ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ஓட்டங்களை கடந்துள்ளார். 36 சதங்கள் மற்றும் 65 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை வேகமாக எட்டி சாதனை படைத்துள்ளார் ஜோ ரூட். இவர் 153 போட்டிகளில் 13,000 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளிலும் எடுத்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 13,378 ஓட்டங்களையும் ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ஓட்டங்களிலும் ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...

உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதி போட்டி இன்று அரம்பம்

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இன்று...