follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்ஜப்பான் சென்றடைந்தார் இந்திய பிரதமர் மோடி

ஜப்பான் சென்றடைந்தார் இந்திய பிரதமர் மோடி

Published on

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்.

கடந்த ஜூலை 8ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானை அதிககாலம் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள அபேவிற்கு பிரம்மாண்டமான முறையில் இறுதிச்சடங்குகள் நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளார். தனிப்பட்ட முறையிலும் தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் மிகுந்த பணிச்சுமைக்கு இடையிலும் அபேவின் இறுதிச்ச டங்கில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

இதற்காக நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...