2023-2025 காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள SLC தேர்தலுக்கான வேட்புமனுக்களை இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்தல் குழு இன்று பெற்றுக்கொண்டது.
இலங்கை கிரிக்கெட் தனது அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துவதற்கு 2023 மே 20 அன்று நிர்ணயித்துள்ளது.
இன்று(28) காலை 9.30 மணிக்கு வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு மாலை 3.30 மணியுடன் நிறைவடைந்தது.