கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜா எல, குடஹாகபொல புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரும் சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.