follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுவீதி விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள்

வீதி விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள்

Published on

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் வீதி ஒழுக்கம் சட்டங்கள் சாரதிகளுக்கு விசேட பயிற்சி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை வீதி விபத்துக்களினால் 1,948 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 10 வருடங்களில் சுமார் 27,000 இறந்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஒழுங்குகளை பாதுகாக்கும் வகையில் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்களிப்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.

தண்டப்பணம் செலுத்தும் முறையில் காணப்படும் குறைபாடுகளை தவிர்த்துக்கொள்ள உடனடியாக தண்டப்பணம் செலுத்தும் முறை மற்றும் சாரதி மதிப்பெண் முறையை விரைவில் அறிமுகப்படுத்துவதாகவும், இதற்கான துரித வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றின் தேவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வீதி ஒழுங்குகள் தொடர்பில் சாரதிகளை விழிப்பூட்டும் நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிலவும் கொவிட் சூழலில் அது தாமதமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அதன் முதற்படியாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சாரதிகளுக்கு 2 வார பயிற்சியை விரைவில் ஆரம்பிப்பதாகவும் திலும் அமுனுகம தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...