follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1தெருநாய்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சம்

தெருநாய்களால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சம்

Published on

இலங்கையில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சரியான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினால் அச்சம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் 60 இலட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தெரியவந்துள்ளது, மேலும் அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டமும் முடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும், பொது இடங்களிலும் ஏராளமான நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

இந்த நிலை தற்போது பாரிய சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெறிநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், அந்த வேலைத்திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் சுகாதாரத் திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் தெருநாய்கள் கடித்து 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலைமையை முறையாகக் கட்டுப்படுத்த விஞ்ஞான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதாரத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், பொதுமக்களிடையே உள்ள...