உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேட பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்துக் பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.