கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த வெலிகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டு அதன் தவிசாளரை தெரிவு செய்துள்ளது.
சீதாவக்கபுர நகர சபையின் தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (24) நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர பெரும்பான்மை வாக்குகளுடன் வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெலிகம பிரதேச சபைக்கு பலத்த பாதுகாப்பு — UPDATE
வெலிகம பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (24) இரண்டாவது முறையாக நடைபெவுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்பு கடுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய தவிசாளர் தேர்தல் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. அந்தவேளை, தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதுடன், பிரதேச சபை வளாகத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எரந்தி டி. உமங்கா மெண்டிஸ், தவிசாளர் தேர்தலை இன்றையதுவரை ஒத்திவைக்க தீர்மானித்திருந்தார்.
தற்போது வெலிகம பிரதேச சபை வளாகத்திற்கு அருகில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.