இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பாடசாலையின் ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது, மேலும் விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 மாணவர்கள் உள்ளே இருந்துள்ளனர்.
கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தது, மேலும் இது தொடர்பாக முன்னர் பல முறைப்பாடுகள் வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.