மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினராக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப் போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார்.
திமுக கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.
மாநிலங்களவை எம்.பி.யாக திமுக கூட்டணி சார்பில் தேர்வான மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
பதவியேற்பு விழாவில், “கமல்ஹாசன் எனும் நான், இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்” என்றும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.