முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா காலிங்கவங்ச முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, தனது கட்சிக்காரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு முன்பிணை கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த மனு நீதவானால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.