செவ்வாய் முதல் திருமணத்திற்கு தடை : இன்று நள்ளிரவு முதல் ஒன்றுகூட தடை

900

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சிற்றுண்டிச்சாலைகளில், ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here