follow the truth

follow the truth

May, 31, 2025
Homeஉலகம்தைவானை பாதுகாக்க அமெரிக்கா படைகளை பயன்படுத்தும்

தைவானை பாதுகாக்க அமெரிக்கா படைகளை பயன்படுத்தும்

Published on

தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பைடனின் இந்த கூற்று மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதே சமயம் தைவான் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பானிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பைடன். அவர் தைவான் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடனான செய்தியாளர் சந்திப்பில், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தனது படைகளை அனுப்புமா என பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “ஆம் நாங்கள் உறுதியளித்துள்ளோம்.” என தெரிவித்தார்.

‘ஒரே சீனா’ என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் ஆனால் தைவானை வலுகட்டாயமாக சீனா கைப்பற்ற நினைத்தால் அது சரியல்ல என பைடன் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா குழந்தைகளின் நிலையை பார்க்க முடியவில்லை – ஐ.நா. கூட்டத்தில் அழுத பலஸ்தீனிய தூதர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும்...

பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்த பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் வந்து செல்லும் அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பதை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப...

காசாவிற்கு புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்?

காசா பகுதியில் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிய அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,...