follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழப்பு

கொவிட் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழப்பு

Published on

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 87 பெண்களும் 97 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை 5,500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව தகவல் திணைக்களம் Government 07.09.2021 ChiefEditor Editor /News Editor Director (.s)/ News Manager Release No:911/2021 Time 18.40 Covid death figures reported today 07.09.2021 Covid 19 death figures that were reported today September 07. 2021 after confirmed by the Director General of Health Services yesterday (06) are as follows. Male Age group Below years Between 30-59 years 60 years and above Total Female Total 26 68 97 20 66 87 46 34 184 Dmr' পd Imm Mohan Samaranayake Director General of Government Information කිරුලුපන මාවන, කොලඩ ලංකාට. 183. கிருலப்பனை எவளிய. கொலம்பு இலங்கை, நதர 411)2515759 11)2514753 www.news.lk"

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. நாளை...

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...