2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 15,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 6,209 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 964 கார்கள் 2022 ஆம் ஆண்டிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 19 முச்சக்கர வண்டிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்