follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉள்நாடு8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Published on

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகு மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்பிரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் ஜெகதாபட்டணம் மற்றும் நாகபட்டணத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்திய மீனவர்கள் 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் 25 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...