இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 189 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 25 படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கடற்படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட படகுகள் சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.