அமெரிக்காவில் நடைபெறும் மாற்றியமைக்கும் கல்வி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளை சந்தித்தார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய அபிவிருத்தித் திட்டத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் பிரேமஜயந்த, இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை நவீன தொழில்நுட்பத்துடன் வழங்குவதற்கு பங்களிக்குமாறு அறக்கட்டளைக்கு அழைப்பு விடுத்தார்.
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்பது பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க தனியார் அறக்கட்டளை ஆகும். இது வில்லியம் எச்.கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கேட்ஸ் கற்றல் அறக்கட்டளை ஆகியவற்றின் இணைப்பாகும்.