follow the truth

follow the truth

September, 17, 2024
Homeவிளையாட்டுஇந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

Published on

14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.

14ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமானது.

மே மாதம் 2ஆம் திகதி 29 போட்டிகள் நிறைவடைந்ததிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்களை கொவிட்-19 பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு இன்று தொடர் மீள ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகின்ற இந்த தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

எஞ்சிய 27 லீக் போட்டிகள் உட்பட மொத்தமாக 31 போட்டிகள் டுபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ICC ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீராங்கனை ஹர்ஷிதா

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது....

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி...