follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் - அமெரிக்கா

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் – அமெரிக்கா

Published on

இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த தருணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டார்.

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இது தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளது.

No description available.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுக்கு அடுத்த வருடத்துடன் 75 அகவை பூர்த்தியாகின்றது.

இந்தநிலையில் அமெரிக்கா – இலங்கைக்கு அன்பளிப்பு, கடன் மற்றும் ஏனைய உதவிகள் என்ற வகையில் 240 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இந்த உதவி திட்டங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று பிளிங்கன் உறுதியளித்தார்.

தமது சந்திப்பின் போது, உலக காலநிலை விடயங்கள், அதில் இலங்கைக்கான திட்டங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக பிளிங்கன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் கருத்துரைத்த, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகள், அதற்கான அமரிக்காவின் ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் அலி சப்ரி இலங்கை சார்பில் நன்றியை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

நேற்று(18) தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில்...

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...