இளம் கால்பந்து வீரர் அன்டன் வால்க்ஸ் மரணம்

1011

தொழில்முறை கால்பந்து வீரர் அன்டன் வால்க்ஸ் (Anton Walkes), மியாமி கடற்கரையில் படகு விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, மியாமி மரைன் ஸ்டேடியம் பேசின் அருகே புதன்கிழமை இரண்டு படகுகளுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் 25 வயதான வால்க்ஸ் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்துக்குள்ளான படகுகளில் ஒன்றை வால்க்ஸ் இயக்கிக் கொண்டிருந்தார் என்று அரசு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இது குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here