ஏமனில் நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் தலைநகர் சனாவில் பாடசாலை ஒன்றில், ரமழானையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளதுடன், 322 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு சுமார் $9 (£7; €8) வரை நிதியுதவி வழங்குவதை அறிந்த மக்கள், பாடசாலையில் ஒரே நேரத்தில் அதிகளவில் குவிந்ததாக கூறப்பட்டுள்ளது.