“கையை உயர்த்தும் முன் மீண்டும் சிந்தியுங்கள்” – ஜனக

624

பொதுமக்களின் மின் கட்டணத்தினை அதிகளவு உயர்த்துவதற்கு எதிராக செயற்படுவது தவறு என கருதி, நாளை (24) தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கும் பிரேரணைக்கு கையை உயர்த்துவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருமுறை சிந்திக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 15 வருடங்களுக்கு முன்னர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே எனவும், அந்தக் குற்றச்சாட்டுக்களில் தாம் குற்றவாளியாக காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதத்தை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு சபாநாயகர், பாராளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் கௌரவ அதிகாரி ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அவரது கோரிக்கைக்கு பதிலளித்த சபாநாயகர், இந்த நாட்களில் பொதுக் காட்சியகம் மூடப்பட்டுள்ளதால் விவாதத்தைப் பார்ப்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் வழங்குவது சிரமமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற வகையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்காக ஆஜராகியதாகவும், பொதுமக்களுக்காகப் பேச நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அத்தகைய திட்டத்தை எதிர்த்தால், அதற்காக மக்கள் காத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உருவாக்கிய ஜே. ஆர்.ஜெயவர்தன 1977ஆம் ஆண்டு அரசியலமைப்பை தயாரிக்கும் போது, ​​இந்த அரசியலமைப்பில் பெண்ணை ஆணாகவோ, ஆணை பெண்ணாகவோ மாற்ற முடியாது என அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கைகளும் பொய்யான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here