ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில்

352

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று காலை நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளின் பின்னர் விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பின்னர், இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here