18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தல் இன்று (21) முதல் நாட்டின் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என
சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சியாமன் ராஜேந்திரஜித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரையில், நாட்பட்ட நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட 20,000 பேருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.