பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் 1990 முதல் 1992 வரை அதிபராக இருந்தவர். அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராசின் துணை நிறுவனத்துடன் ஒரு கட்டுமான நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்ய சுமார் ரூ.32 கோடி லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து இந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியானது. அதில் பெர்னாண்டோ மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 8 ஆண்டு 10 மாதம் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.