follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழிவு

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழிவு

Published on

நாளை (21) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் பாலியல் இலஞ்சம் தொடர்பான எண்ணக்கரு ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மகிழ்ச்சியடைவதாக ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சபாநாயகருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

எனினும், நாளை(21) இடம்பெறவுள்ள விவாதத்துக்கு முன்னர் மறுசீரமைக்கப்பட வேண்டிய இரண்டு முன்னுரிமைகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுதர்ஷினி பர்னாந்துபுல்லே அறிவித்துள்ளார்.

அதில் முதலாவதாக, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “பாலியல் நாட்டம்” எனும் குற்றத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், “நாட்டம்” என்பதன் மூலம் குற்றம் சிறிதாக்கப்படுவதாகவும் அதனால், அதற்குப் பதிலாக “பாலியல் இலஞ்சம்” எனும் பதம் மூலம் செயற்பாட்டின்/குற்றத்தின் தீவிரத்தன்மை சிறந்த முறையில் காட்டப்படுவதால் அந்தப் பதத்தை பயன்படுத்துமாறும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டாவதாக, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “இலஞ்சம் சம்பந்தமாக, இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்” எனும் கருத்தைக் கொண்ட பிரிவைக் காரணமாகக் கொண்டு “பாலியல் இலஞ்சம்” என்பதில் உள்ள பாலினம் காரணமாக, பாலியல் இலஞ்சம் தொடர்பில், இலஞ்சம் வழங்கும் நபருக்கு அநியாயம் இழைக்கப்படக்கூடும் என சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் பாலியல் இலஞ்சம் வழங்கும் நபர் ஒருவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் விதிவிலக்கொன்றை உள்வாங்குமாறு கோரிக்கை விடுப்பதாக பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ராகம – கந்தானை – வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்றிரவு(04) இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...