48மணி நேர மின்வெட்டு : சரி செய்ய யாரும் வரமாட்டோம்

2784

நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் பொது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் …

நவம்பர் 3ஆம் திகதி மாபெரும் போராட்டத்தை நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருவார்கள். எனவே, நான் சொல்வதெல்லாம், தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதனை சரிசெய்ய யாரும் இருக்க மாட்டார்கள், மின்சார சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here