பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிராக SJB நீதிமன்றம் செல்லத் தயார்

60

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இச்சட்டமூலம் எவ்வாறு திருத்தப்பட்டாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது பல தரப்பினர் நீதிமன்றத்திற்குச் சென்று குறித்த தடுப்புச் சட்டம் ஏற்புடையதல்ல எனக் கூறியதுடன், பல சர்வதேச அமைப்புகளும் இதனைத் தெரிவித்தன.

அதன் பின்னர், அது மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்டு, அது இன்னும் வர்த்தமானியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

ஆனால், திருத்தப்பட்ட சட்டம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. திருத்தம் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நீதிமன்றத்திற்கு செல்வோம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here