follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் மக்களுக்கு சிவப்பு அறிவித்தல்

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் மக்களுக்கு சிவப்பு அறிவித்தல்

Published on

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவவுதாகவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எனவே, வௌ்ளத்தினால் ஏற்படும் அபாயங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...