அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் இல்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சம்பா அரிசி 230 ரூபாவிற்கும் நாட்டரிசி 220 ரூபாவிற்கும் கீரி சம்பா 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் மக்கள் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் நோக்கில் இன்று(26) முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.