follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP2யுனிசெப் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

யுனிசெப் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

Published on

எமது நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான புரிந்துணர்வு சார் சந்திப்பொன்று இன்று(26) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியத்தின்(UNICEF) இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்களும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியம்(UNICEF), ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியம்(UNFPA) மற்றும் உணவு விவசாய ஸ்தாபனம் (FAO) என்பவற்றுடன் இணைந்து இலங்கையின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியால் எவ்வாறு செயலூக்கமாக பங்களிக்க முடியும் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

எமது நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறைமைகளை மேம்படுத்தும் வகையில் யுனிசெப் அமைப்பு கூடிய ஒத்துழைப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யுனிசெப் பிரதிநிதிகளிடம் கடுமையாக கோரிக்கை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், இலங்கை குடும்பங்கள் எதிர்கொள்ளும் ஊட்டச்சத்துச் சவால்கள், எமது நோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் சிகிச்சைகள், சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.

இவ் விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கும் ஆழ்ந்த அறிவைப் பாராட்டிய UNICEF இன் பிராந்திய பணிப்பாளர், ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கிஸ்ஸ கொலையின் சந்தேக நபர்கள் மூவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...