follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP2350 மில்லியன் டொலர் செலவில் கொழும்பில் 05 வீட்டுத்திட்டங்கள்

350 மில்லியன் டொலர் செலவில் கொழும்பில் 05 வீட்டுத்திட்டங்கள்

Published on

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரிய நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வீடமைப்பு அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் இயலுமை கிட்டியுள்ளது. 2024 வரவு செலவு திட்டத்துடன் அந்த திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம்.

சில வேலைத்திட்டங்களில் மோசடிகள் நிகழ்கின்றன. அவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுக்கும்.

சிறு மற்றும் மத்திய தர வருமானம் ஈட்டும் மக்களுக்காக கொழும்பில் 05 வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்காக மொத்தமாக 350 டொலர் மில்லியன்கள் செலவாகும். ஜனாதிபதியின் அண்மைய சீனாவிற்காக விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிடைத்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அத்தோடு கொழும்பில் நீர் நிரம்புவதை தடுப்பதற்கு தாழ்நில அபிவிருத்தி அதிகார சபையினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடல் தாவரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கும் பயணத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு உயரிய பங்களிப்பை வழங்கும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கிஸ்ஸ கொலையின் சந்தேக நபர்கள் மூவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...