ஒரு அரசாங்கம் என்ற வகையில், பலசரக்குகள் துறையை மேம்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கறுவா பெறுமதியை மேம்படுத்தும் வகையில் கறுவாவிற்கான தனியான திணைக்களமொன்றை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை மிகவும் காலத்துக்குரியது என்றே கூற வேண்டும்.
பலசரக்குகள் தொழில் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதியின் தலைமையில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.