கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக தரைவழி தொலைபேசிகள் (லேண்ட்லைன்) மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த வரி அறவிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.