follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்வடகிழக்கு சீனாவில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

வடகிழக்கு சீனாவில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

Published on

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் 116 ஆண்டுகளில் காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி பனிப்பொழிவு 51 செ.மீ. உயரத்தை அடைந்துள்ளது.

1905ம் ஆண்டு முதல் பதிவானதிலேயே மிக அதிகமான பனிப்பொழிவு இதுவாகும் என கூறப்படுகிறது.

இந்த மாகாணத்துக்கு அருகே உள்ள மங்கோலியாவின் உள் பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு அதில் 5,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் அங்கு வாகன மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிர் அலை ஆரம்பித்ததில் இருந்து, வடகிழக்கு சீனாவில் வெப்பநிலை சில பகுதிகளில் 14 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைந்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...