follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP2யானை - மனித மோதல்களைக் குறைக்க நவீன தொழில்நுட்பம்

யானை – மனித மோதல்களைக் குறைக்க நவீன தொழில்நுட்பம்

Published on

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டங்கள் அனுராதபுரம், புத்தளம், அம்பாறை மற்றும் யானை – மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.

யானை – மனித மோதல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த சிறிய நாட்டிள் மக்கள் தொகையை போன்றே யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு நீர்பாசான வேலைத்திட்டங்கள் யானைகளின்பாதைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன.

மக்களின் விவசாயச் செயற்பாடுகளும் யானைகளின்
பாதைகளை பாதிக்கின்றன. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவைத் தடுப்பதற்கு அடுத்த வருடத்தில் ஆயிரம் கிலோ மீற்றர் யானை தடுப்பு வேலிகளை அமைக்க எதிர்பார்க்கிறோம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...

தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக...

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...