follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுசிவில் விமான சேவைகள் அதிகாரி கொடூரமாக படுகொலை : சந்தேகநபர் கைது

சிவில் விமான சேவைகள் அதிகாரி கொடூரமாக படுகொலை : சந்தேகநபர் கைது

Published on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று (09) மாலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக பணியாற்றிய 41 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மடபட, பிரியயன்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​தாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து டேலோ சிலோன் பொலிசாரிடம் வினவியபோது, திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபர், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்த அவர் தீவுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...