ஜயா கொள்கலன் மற்றும் கிழக்கு கொள்கலன் முனையங்களில் கொள்கலன் நடவடிக்கைகளின் அதிகரித்த செயல்திறன் காரணமாக துறைமுக அதிகாரசபையின் செயல்பாட்டு திறன் 2% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் (2023) ஜயா கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கொள்கலன் நடவடிக்கைகள் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில், இந்த இரண்டு முனையங்களும் 1,965,128 கொள்கலன்களைக் கையாண்டு 2% வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டில் கொள்கலன் நடவடிக்கைகளில் வீதம் குறைவடைந்தாலும், உலக சந்தையில் நிலவும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலவரங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதால், கொள்கலன் நடவடிக்கைகளில் அதிகரிப்பு ஏற்படும் என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு கொழும்பு துறைமுகம் கொள்கலன் நடவடிக்கைகளின் மூலம் 1.17% வளர்ச்சியை எட்டியுள்ளது.