செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
செங்கடல் வழியாகச் சென்ற ‘கேலக்ஸி லீடா்’ சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 24 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தகைய தாக்குதல்களை ஹூதி கிளா்ச்சியாளா்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை பிரேரணை ஒன்றை நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.
உலகின் கடல் வணிகத்தில் பிரதான வழித்தடமான செங்கடல் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெறுவதால், நாடுகள் பல பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.