ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புச் சேவை வழங்குநரும் பயிற்சி நிறுவனமுமான எலைட் இன்ஸ்டிட்யூட் பிரதிநிதிகளுக்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கராக அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (22) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்றது.
இப் பயிற்சி நிலையத்தை நிறுவுவதன் மூலம், தகுதியானவர்களை உரிய வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை செயற்படுத்துவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளுக்கும் அரசின் பூரண ஆதரவை பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார்.