கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அபிராமியுடன் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவுக்காக, குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு கேரளா தப்பிச் செல்லவிருந்த அபிராமி – மீனாட்சி சுந்தரம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.