காஸாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காஸா துன்பத்தில் சிக்குண்டுள்ளதாக உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.
பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேவையானவற்றில் ஒரு துளி மட்டுமே தற்போது காசாவில் உள்ள மக்களைச் சென்றடைவதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.